News February 6, 2025

புதுக்கோட்டை: தூக்கிட்டு இளைஞர் தற்கொலை

image

புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த பழனிவேலு (30) என்பவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கணேஷ்நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல தற்கொலை எண்ணம் தொன்றினால் 104 என்ற தற்கொலை தடுப்பு மைய எண்ணிற்கு அழைக்கவும்.

Similar News

News November 9, 2025

புதுகை: புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

image

தமிழக அரசு சிறு தொழில் வளர்ச்சிக்கான மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் முதல் 5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் 25 % அல்லது 75 லட்சம் தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. இதற்கு 12th தேர்ச்சி பெற்ற, 21 வயது பூர்த்தியடைந்த புதிய தலைமுறை தொழில் முனைவோர் www.msme online.tn.gov.in/neets என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து, அதனை மாவட்ட தொழில் மையத்தில் கொடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 9, 2025

புதுக்கோட்டை: அடையாளம் தெரியாத நபர் சடலமாக மீட்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுமடை SOC-யில் நேற்று அடையாளம் தெரியாத யாசகம் பெறும் நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து விராலிப்பட்டி சரக VAO அளித்த புகாரின் அடிப்படையில், கந்தர்வகோட்டை காவல்துறையினர் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News November 9, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதற்கு தடை

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (10.11.2025) நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று (09.11.2025) மற்றும் நாளை (10.11.2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது.

error: Content is protected !!