News February 5, 2025
ரூ.1.11 கோடி கையாடல்: வங்கி கிளை மேலாளர் கைது

சேலம் ஸ்ரீராம் பைனான்ஸ் மண்டல மேலாளர் நரேந்திர குமார், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், கொளத்தூர் தனியார் வங்கி கிளை மேலாளர் சம்பத், வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் ரூ.1,11,20,000 கையாடல் செய்ததாக தெரிவித்ததை அடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், உண்மையை கண்டறிந்து சம்பத்தை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 11, 2025
சேலம்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

சேலம் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய <
News September 11, 2025
சேலம் மாவட்டத்தில் 263.1 மி.மீ மழைப்பதிவு!

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 263.1 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, சேலம் மாநகரில் 62.6 மி.மீ. மழையும், டேனிஷ்பேட்டையில் 60 மி.மீ. மழையும், மேட்டூரில் 51.4 மி.மீ. மழையும், ஏற்காட்டில் 29.4 மி.மீ. மழையும், எடப்பாடியில் 18 மி.மீ. மழையும், ஓமலூரில் 12.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
News September 11, 2025
ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்த 26,165 பேருக்கு அபராதம்!

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த சுமார் 26,165 பேரிடம் இருந்து ரூபாய் 1.82 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. ரயிலில் பயணிக்கும் மக்கள் முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். மீறி டிக்கெட் இன்றி பயணித்தால் டிக்கெட் பரிசோதகர்களால் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.