News February 5, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்ட காவல்துறை உட்கோட்டத்திற்க்குட்பட்டசேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (பிப்.5) இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News September 11, 2025
ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்த 26,165 பேருக்கு அபராதம்!

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த சுமார் 26,165 பேரிடம் இருந்து ரூபாய் 1.82 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. ரயிலில் பயணிக்கும் மக்கள் முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். மீறி டிக்கெட் இன்றி பயணித்தால் டிக்கெட் பரிசோதகர்களால் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 11, 2025
சேலம்: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

சேலம் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற இலவச எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும்.SHARE IT NOW
News September 11, 2025
சேலம்: நடுரோட்டில் பீர் பாட்டில் சண்டை!

வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (38). வாழப்பாடி அய்யாகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (37). இருவரும், புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை முன், நேற்று இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பீர் பாட்டிலால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு குத்திக்கொண்டனர். இதுகுறித்து தகவலின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற வாழப்பாடி போலீசார், இருவரையும் மீட்டு, விசாரிக்கின்றனர்.