News February 5, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
கரும்பு தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி அறிவிப்பு

தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகின்ற 24.09.2025 புதன் கிழமை அன்று காலை 10 மணி அளவில் விவசாயிகளுக்கு கரும்பு மற்றும் தென்னை சாகுபடியில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. ஆகையால் விவசாயிகள் அனைவரும் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற வேளாண் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (செப்.22) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
News September 22, 2025
தருமபுரி அருகே தந்தை, மகனுக்கு ‘காப்பு’

கடத்துார் அடுத்த மணியம்பாடி வருவாய் கரடு பகுதியில், கற்றாழை தோட்டம் உள்ளது. அங்கு கற்றாழை வெட்டி கடத்தப்படுவதாக வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வனவர் கணபதி உள்ளிட்ட அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லம்பள்ளியை சேர்ந்த முருகன், அவரது மகன் சிவலிங்கம், ஆகியோர் திருட்டுத்தனமாக கரடு பகுதியில் வெட்டி வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது.