News February 5, 2025
சிறுமி வன்கொடுமை அதிர்ச்சியளிக்கிறது – இபிஎஸ்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
சேலத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ▶️ உடையாப்பட்டி துணை மின் நிலையம் ▶️மேட்டுப்பட்டி துணை மின் நிலையம் ▶️மல்லியக்கரை துணை மின் நிலையம் ▶️கருப்பூர் துணை மின் நிலையம் ▶️நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ். துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது.SHAREit
News July 8, 2025
இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் ஐ.நா விருது கிடைத்துள்ளது!

“இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஒரு துறைக்கு ஐ.நா. விருது கிடைக்கப் பெற்றுள்ளது
தமிழகத்திற்கு தான். இந்தியா முழுவதும் விபத்தில் சிக்கும் மக்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக அடித்தளமிட்டவர் தமிழக முதலமைச்சர் தான்” என சேலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!
News July 7, 2025
சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருட்களை விற்க ஒவ்வொரு வட்டாரத்திலும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையோ அல்லது சேலம் உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள சேலம் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.