News March 28, 2024

பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.6.16 லட்சம் விடுவிப்பு

image

தஞ்சாவூரில் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.16 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாகத் விடுவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

தஞ்சை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<> tahdco.com <<>>இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது தஞ்சை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். இதனை அனைவர்க்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

தஞ்சை: குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி பலி

image

ஒரத்தநாடு அருகே தலையாமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்த புஷ்பவல்லியின் பேத்தி ரம்யா (20), மன்னார்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை புதுக்குளத்தில் குளிக்கச் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது குளத்தில் பிணமாகக் கிடந்தார். ஒரத்தநாடு போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

error: Content is protected !!