News February 5, 2025
அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாா் அளிக்கலாம்

வேலூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள், புகாா்கள் தொடா்பாக அரசு அலுவலா்கள் நேரடியாகவோ, இடைத்தரகா்கள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாா் தெரிவிக்கலாம். தகவலை நேரிலோ, கைப்பேசி மூலமாகவோ தெரிவிக்கலாம். வேலூா் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலக தொலைபேசி 0416 – 2220893 எண்ணில் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 26.08.2025 முதல் 12.09.2025 வரை காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
News August 22, 2025
வேலூர்: வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

வேலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News August 22, 2025
வேலூர்: காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.

வேலூர் மாவட்ட காவல்துறை மற்றும் நாராயணி மருத்துவமனை இணைந்து நாளை (ஆக.23) இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்துகிறது. கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த முகாமில், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.