News March 28, 2024
வாகனத்தை தாண்டி குதிரை சாகசம்

குன்னூர் மவுண்டன் ஜிம்கானா என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வீராங்கனைகள் கலந்து கொண்ட குதிரை சாகச நிகழ்ச்சி நேற்று (மார்ச் 27) நடைபெற்றது. இதில், குதிரைக்கான சவாரி, ஆசர்லே, ஷோ ஜம்பிங், டிரிக் ஜம்பிங் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில், ராணுவ வாகனத்தை தாண்டி பாய்ந்தது பலரை கவர்ந்தது.
Similar News
News November 10, 2025
தேவர்சோலை: பசுவை வேட்டையாடிய புலி

தேவர்சோலை பேரூராட்சி மாணிக் கல்லாடி பகுதியில் வசித்து வரும் அரிதாஸ் என்பவரின் பசுமாடு இவரது வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் மேய்ச்சலில் இருந்தபொழுது அப்ப இதில் மறைந்திருந்த புலி பசுவை அடித்துக் கொன்றது, இதனால் இப்பகுதியில் உள்ள கால்நடை விவசாயிகள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர், மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனத்துறையின விசாரணை நடத்தி வருகின்றனர்
News November 9, 2025
நீலகிரி ரோந்து காவலர் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (09.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News November 9, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், எதிர்வரும் (நவ.14)ம் தேதி, காலை ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உள்ள கீழ்த்தர கூட்ட அரங்கில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மருத்துவர்கள் மற்றும் முன்னாள் வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.


