News March 28, 2024
100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு

தமிழகம் உட்பட அனைத்து மாநிலத்திற்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரிக்கான 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.319ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான ஊதியம் ரூ.294 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 16, 2025
முதலிடம் பிடித்த ஸ்மிருதி மந்தனா!

இந்திய இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ODI ரேங்கிங்கில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டில் அவர் முதல் இடம் பிடிப்பது இது 2-வது முறையாகும். 735 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தில் இருக்க, இங்கிலாந்தின் Sciver-Brunt 731 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். நடைபெற்று வரும் இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில் ஸ்மிருதி மந்தனா முதல் ODI-ல் 58 ரன்களை அடித்திருந்தார்.
News September 16, 2025
‘இறந்த மகளுடன் தினமும் பேசுகிறேன்’

தற்கொலை செய்து கொண்ட தனது மகள் மீரா குறித்து விஜய் ஆண்டனி எமோஷனலாக பேசியுள்ளார். மகளின் இழப்பு குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பியபோது, ‘இது இழப்பு இல்லை. அவள் என்னுடன்தான் இருக்கிறாள், அவளுடன் தினமும் பேசுகிறேன், என்னுடனே அவள் பயணிக்கிறாள். அவளை மிஸ் செய்கிறேன் என்று சொன்னால் சரியாக இருக்காது’ என உருக்கமாக பேசினார். 2023-ல் மீரா தனது 16 வயதில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
News September 16, 2025
உ.பி., ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்: ஆதித்யநாத்

பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயம் என சமீபத்தில் SC தீர்ப்பளித்தது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிராக சீராய்வு மனுதாக்கல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், உ.பி., அரசும் சீராய்வு மனுதாக்கல் செய்யவுள்ளது. உ.பி., ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்களுக்கு அவ்வப்போது பயிற்சியும் அளிக்கப்படுவதாக CM யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.