News March 28, 2024
தேர்தல் விதியை மீறியதாக ஓபிஎஸ் மீது வழக்கு

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 25ஆம் தேதி பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன், இ.யூ.மு.லீக் வேட்பாளர் நவாஸ் கனி, திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்டோர் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News March 13, 2026
இராம்நாடு: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..
News March 13, 2026
இராம்நாடு: டூவீலர் வாங்க ரூ.50,000 மானியம்; கலெக்டர் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு, இருசக்கரவாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. ஆகையால் தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
News March 13, 2026
இராம்நாடு: OPS அணியினர் அதிமுகவில் இணைந்தனர்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் M.A முனியசாமி தலைமையில், ஓபிஎஸ் அணியினர் தங்களை நேற்று அதிமுகவில் (மார்ச்.12) இணைத்துக்கொண்டனர். அதன்படி இராமநாதபுரம் தெற்கு ஒன்றிய ஓபிஎஸ் அணியினை சேர்ந்த பாஸ்கரன், ராமச்சந்திரன், நாகேந்திரன், தாமோதரன், துரை ஆகியோர் அஇஅதிமுகவில் இணைந்தனர்.


