News March 28, 2024
795 அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு கடந்த 23 ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 795 அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை. இவர்களுக்கு காரணம் கேட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது .மேலும் 2 நாட்களில் பதிலளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
தூத்துக்குடி: காதல் திருமணம் செய்தவர் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி முத்தையாயாபுரத்தை சேர்ந்தவர் கார் டிரைவர் லட்சுமணன் (35). இவர் செல்வி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று முன்தினம் வீட்டு மாடியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 15, 2025
தூத்துக்குடி: கல்லால் தாக்கி கொலை; 4 பேருக்கு ஆயுள்

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்கு குளி காலனியை சேர்ந்தவர் முருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி ராஜா கணேசன் முத்துச் செல்வனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு இந்த நான்கு பேரும் சேர்ந்து முருகனை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். வழக்கு தூத்துக்குடி நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கருப்பசாமி உட்பட 4 பேருக்கும் இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
News November 15, 2025
தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-க்கான சிறப்பு முகாம் இந்த மாதம் 15.11.2025 மற்றும் 22.11.2025 ஆகிய இரு சனிக்கிழமைகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


