News March 28, 2024
கேபிள் தாசில்தாரை வெட்டியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனில் பணிபுரிந்து வந்த தாசில்தார் முருகேசன் என்பவர் தனது கேபிள் டிவி உரிமத்தை ரத்து செய்ததால் கடமலைக்குண்டை சேர்ந்த வேல்முருகன் என்பவர் 2013 இல் தாசில்தாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுரேஷ்குமார் வேல்முருகனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
தேனி: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு..!

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், பாடத்திட்டங்கள் மற்றும் அது குறித்த சந்தேகங்களுக்கு இனி எங்கும் தேடி அலைய தேவையில்லை. TNPSC, TNUSRB, TRB மற்றும் RRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்களை, மென் பாடக்குறிப்புகளாக அரசு இணையத்தில் பதிவேற்றியுள்ளது. இனி பாடத்திட்டங்களை இந்த லிங்கை <
News February 16, 2026
தேனி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க.
News February 16, 2026
தேனி: 35 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

குமுளி, லோயர் கேம்பில் காவல் உதவி ஆய்வாளர் சூர்யதிலகராணி தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. மதுரையிலிருந்து கேரளத்துக்கு சென்ற காரை சோதனையிட்டதில் 35 கிலோ கஞ்சா கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மதுரை முனிச்சாலை காமராஜபுரத்தைச் சேர்ந்த செல்வி (47), முனியசாமி (36), பாலசுப்பிரமணி (38) கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 35 கிலோ கஞ்சா மற்றும் ரூ.1.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


