News March 28, 2024
BREAKING: ஓபிஎஸ், டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், IUML வேட்பாளர் நவாஸ் கனி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கலின் போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் வந்தது, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
தைப்பூசம்: இந்த ஒரு நாள் விரதமே போதும்

சூரபத்மனை அழிக்க பார்வதிதேவி, முருகப்பெருமானுக்கு ஞானவேலை வழங்கிய நாளே தைப்பூசம் ஆகும். வரும் பிப்ரவரி 1-ம் தேதி இந்நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக, அனைத்து பக்தர்களும் 48 நாள்கள் விரதம் இருந்து முருகனை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தைப்பூச நாள் அன்று ஒருநாள் மட்டும் மனத் தூய்மையுடனும், முழு பக்தியுடனும் வழிபட்டாலே, முருகனின் முழு அருள் கிடைக்கும் என்பதே தைப்பூசத்தின் மைய கருத்து.
News January 28, 2026
தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,000-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $87.45 (இந்திய மதிப்பில் ₹7,994.58) உயர்ந்து $5,171.84-க்கு விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி $2.35 குறைந்து $113.19 ஆக உள்ளது. இதனால், இன்று இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த 30 நாள்களில் மட்டும் $680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 28, 2026
திமுக – காங்கிரஸ் மக்கர் கூட்டணி: நயினார் நாகேந்திரன்

பாஜக டபுள் இன்ஜின் இல்லை, மக்கர் இன்ஜின் என கனிமொழி விமர்சித்திருந்த நிலையில் அதற்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். திமுக- காங்கிரஸ் கூட்டணிதான் இப்போது மக்கர் கூட்டணியாக உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் முடிந்த பின் யார் மக்கர் இன்ஜின், யார் டப்பா இன்ஜின், யார் வந்தே பாரத் இன்ஜின் என தெரிய வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


