News March 28, 2024

கூட்டணியில் இருந்தாலும் பாஜகவை பாமக விமர்சிக்கும்

image

கூட்டணியில் இருந்தாலும், பாஜகவை பாமக விமர்சிக்கும் என்று அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “மாநில நலனுக்காக பாஜகவை இதற்கு முன்பு பாமக விமர்சித்துள்ளது. தற்போது கூட்டணியில் இருந்தாலும், எங்களது கொள்கைகள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டால், பாஜகவை பாமக விமர்சிக்கும்” என்றார்.

Similar News

News March 22, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 640 ▶குறள்: முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். ▶பொருள்: முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.

News March 22, 2026

நள்ளிரவில் பசி எடுக்குதா?

image

இரவு உணவு உண்ட பிறகும் நள்ளிரவில் பசி எடுக்கிறதா? அந்த நேரத்தில் பாஸ்ட் புட்களை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டும். நள்ளிரவு பசியைக் கட்டுப்படுத்த நிபுணர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இரவு உணவில் பருப்பு, முட்டை, பனீர், கோதுமை ஆகியவற்றை சேர்ந்துகொண்டால் வயிறு நிறைந்துவிடும் என்றும் நாள் முழுவதும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

News March 22, 2026

விமான டிக்கெட் விலைகள் அதிகரிக்குமா?

image

போர் காரணமாக ஏப்ரல் 1 முதல் விமான டிக்கெட் கட்டணங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் எண்ணெய் விலை உயர்வால், விமான எரிபொருள் (ATF) விலைகளும் உயர வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் டிக்கெட் கட்டணங்களில் ஏற்படலாம் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் சமீபத்தில் கூறினார். இதற்கிடையில், சில விமான நிறுவனங்கள் ஏற்கெனவே கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன.

error: Content is protected !!