News March 28, 2024

தமிழகத்தில் மகன்களின் அரசியல்

image

கட்சித் தலைவர்கள் மகன்களின் அரசியலால், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. உதயநிதி ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், துரை வைகோ, விஜய பிரபாகரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முந்தைய தேர்தல்களில் குடும்ப அரசியலுக்கு எதிராக பிரசாரம் நடந்த நிலையில், இம்முறை தலைவர்களும், மகன்களும் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதை மக்கள் கண்டு வருகின்றனர். இதை மக்கள் ஏற்பார்களா என காலமே முடிவு செய்யும்.

Similar News

News February 19, 2026

திமுக கூட்டணியில் தேமுதிக.. மகிழ்ச்சியில் காங்கிரஸ்

image

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை வரவேற்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது TN அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும், இக்கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை பெற்றதாக அமையும் எனவும் தனது X பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாநிலத்தின் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கூட்டணி உறுதியாக வெற்றிபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News February 19, 2026

விடுமுறை.. நாளை முதல் 3 நாள்களுக்கு அறிவிப்பு

image

சனி, ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு பள்ளி & கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட பல இடங்களுக்கு நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in-ல் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News February 19, 2026

தேமுதிகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரசாரம் செய்வாரா?

image

2011 தேர்தலில் விஜயகாந்தை விமர்சிக்க தனது பிரசாரங்களில் வடிவேலுவை திமுக பயன்படுத்திக்கொண்டது. அரசியலையும் கடந்து விஜயகாந்த் மீது தனிமனித தாக்குதலை அவர் தொடுத்தார். சமீபத்தில் கூட உதயநிதி பிறந்தநாள் விழா கூட்டங்களில் வடிவேலு பேசியிருந்தார். தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், அவர் அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!