News March 28, 2024
ரத்த சோகையிலிருந்து மீண்ட கா்ப்பிணிக்கு வளைகாப்பு

தஞ்சாவூா் மாவட்டம் கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்ட பூனம் என்ற கா்ப்பிணி பெண்ணுக்கு நேற்று(மார்ச் 27) வளைகாப்பு விழா நடைபெற்றது. கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் மாநகர நல அலுவலா் சுபாஷ் காந்தி தலைமையில், மருத்துவா் கே.மணிமேகலை முன்னிலையில் பூனத்துக்கு வளைகாப்பு நடைபெற்றது.
Similar News
News January 17, 2026
தஞ்சை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News January 17, 2026
தஞ்சை: 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக 44 காவல் நிலைய ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் பணியிட மாற்ற காவல்துறை வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
News January 17, 2026
தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


