News February 3, 2025
கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பயணம்

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற விழாவில் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக உயர்கல்வித்துறை மூலம் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும் தனியாக டெண்டர் விட்டு தனியார் மூலம் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News September 10, 2025
புதுச்சேரி: சட்டப்பேரவை உறுதிமொழி குழு முதல்வருடன் சந்திப்பு

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவையின் உறுதிமொழி குழு உறுப்பினர்கள்
தலைவர் லைசம் சிமாய் MLA, உறுப்பினர் தலிம் தபோ MLA மற்றும் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை செயலக அதிகாரிகள், குழு தலைவர் தபாங் தாகு மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வருகை தந்து சபாநாயகர் செல்வம். ஆர் அவர்களையும், முதலமைச்சர் ரெங்கசாமி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
News September 9, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

புதுவை உருளையான் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்த சாலை, ஒதியன் சாலை போன்ற சில பகுதிகளில் குடிநீர் சம்பந்தமாக சில புகார்கள் வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் பொதுப்பணித்துறை, நீர் பாசனத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
News September 9, 2025
குடிநீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

புதுவையில் மக்கள் மாசுபடிந்த குடிநீரை குடித்து வாந்தி, பேதியால் மூன்று பேர் இறந்துள்ளனர் 50க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.