News February 3, 2025

திருச்சி: தமிழ வெற்றிக் கழகம் நிர்வாகிகள் நியமனம்

image

தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளது. திருச்சி மாநகர் மாவட்டம் திருவரங்கம் தொகுதி, திருச்சி மேற்கு தொகுதி, மாவட்டக் கழகச் செயலாளர் சந்திரா, மாவட்டக் கழக இணைச் செயலாளர் சிவலிங்கம், பொருளாளர் வெங்கடேஷ் பாபு, துணைச் செயலாளர் ஆனந்தகுமார், துணைச் செயலாளர் சாந்த ஷீலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News August 15, 2025

திருச்சியில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் ஆக.31-ம் தேதி, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் திருச்சி மாவட்ட வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE NOW !!

News August 15, 2025

திருச்சி: தேவாலயங்களை புனரமைக்க மானியம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் பீடம் கட்டுதல், குடிநீர், கழிவறை வசதிகள், சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு மானியம் வழங்க உள்ளது. இதற்கு தகுதியான தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

சென்னை – திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்

image

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளிக்கு இன்று (ஆக.14) இரவு இயக்கப்பட உள்ளது. இன்று இரவு 11:10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் நாளை (ஆக.15) காலை 7:30 மணிக்கு திருச்சி வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!