News February 3, 2025

ஒரே ஒரு வார்த்தை: 25 லட்சம் கொடுத்த VJS!

image

விஜய் சேதுபதி குறித்து பல விஷயங்களை நடிகர் மணிகண்டன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் ஒரு விஷயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது நண்பனுக்கு ஆபரேஷன் பண்ண வேண்டி இருந்தது. ஆபரேஷன் பண்ணலைனா அவன் பிழைக்க மாட்டானு சொல்லிட்டாங்க. விஜய்சேதுபதி அண்ணனிடம் இதை தயங்கி தயங்கி கூறினேன். அடுத்த 10 நிமிஷத்தில் என் அக்கவுண்ட்டுக்கு 25 லட்சம் வந்துருச்சு. அதுதான் அவரோட மனசு என மணிகண்டன் கூறினார்.

Similar News

News March 22, 2026

BREAKING: பாஜக பட்டியலில் இருந்து தமிழிசை நீக்கம்

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கப்பட்டுள்ளது. 40 பேர் கொண்ட பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் எல்.முருகன், அண்ணாமலை பெயர்கள் உள்ளபோதும் தமிழிசை பெயர் நீக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை கிளப்பியுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் தமிழிசை பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2026

புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் இவர்கள் தான்!

image

புதுச்சேரியில் அதிமுக போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை EPS வெளியிட்டுள்ளார். அதன்படி, உப்பளம் தொகுதியில் முன்னாள் MLA-வும் புதுச்சேரி அதிமுக மாநில செயலாளருமான அன்பழகன் களமிறங்குகிறார். அதேபோல், உருளையன்பேட்டை தொகுதியில் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2026

Surety வேண்டாம்.. ₹20 லட்சம் கடன் தரும் திட்டம்

image

முத்ரா கடன் திட்டத்தின் கீழ், ஏழை எளியோரும் தொழில் தொடங்கி, தொழில்முனைவோராக மாற ₹20 லட்சம் வரை எந்த பிணையமும் இல்லாமல் கடன் கிடைக்கிறது. இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தினால் போதும். அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் கடன் பெறலாம். இத்திட்டத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ள https://www.mudra.org.in/ தளத்தை பார்வையிடுங்கள். SHARE.

error: Content is protected !!