News February 3, 2025
லாரி – பஸ் மோதி விபத்து: 4 பேர் பலி

ஆந்திராவில் திருப்பதி மாவட்டத்தில் நடந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். புத்தூர் – நகரி சாலையில், ராமாபுரம் அருகே, திருத்தணியை நோக்கி வேகமாக சென்ற லாரி ஒன்று தனியார் பேருந்து மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலதிக தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 6, 2026
புதுச்சேரி: சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில்

திருநள்ளாறில் இன்று நடைபெறும் சனி பெயர்ச்சியை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விழுப்புரம், திருநள்ளாறு, நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காலை 9.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்படும் ரயில் மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும் என்றும் மதியம் 1.20 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
News March 6, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 6, 2026
‘US தாக்கினால் இந்தியாவை குறை சொல்ல முடியாது’

ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்று பாஜக தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். அவரது X பதிவில், இச்சம்பவம் இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 250 nautical miles தூரத்தில், சர்வதேச கடலில் நடந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச கடல் சட்டப்படி அந்த பகுதியில் நடந்த செயல்களுக்கு இந்தியாவுக்கு பொறுப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


