News February 3, 2025

பிராமணர்களுக்கு பதவி கொடுங்க: சுரேஷ் கோபி

image

நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக பிராமணர், நாயுடு போன்ற உயர் ஜாதிகளை சேர்ந்தவர்களை நியமித்தால்தான் பழங்குடியின மக்கள் முன்னேறுவார்கள் என கூறினார். மேலும், பழங்குடியின நலத்துறைக்கு அச்சமூகத்தை சேர்ந்தவர்களே அமைச்சராக நியமிக்கப்படுவது, மிகப்பெரிய சாபக்கேடு என்றும் அவர் தெரிவித்தார்.

Similar News

News March 13, 2026

பெட்ரோல், கேஸ் சிலிண்டர்.. அடுத்த அதிர்ச்சி

image

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராகவே உள்ளதாகவும், சில கட்டுப்பாடுகள் என்பது தற்காலிகமானதே என அரசு கூறியிருந்தது. ஆனால், பெட்ரோல், டீசல் விற்பனை இருமடங்கு உயர்ந்ததால், நேற்று இரவு சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சில பெட்ரோல் பங்க்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், ஹோட்டல்களில் உணவு வகைகளும் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News March 13, 2026

சமையல் எண்ணெயின் விலை உயர்ந்தது

image

போரின் விளைவால் சமையல் எண்ணெயின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது விலை கிலோவுக்கு ₹1 – ₹4 வரை உயர்ந்துள்ளன. சன்ஃபிளவர் எண்ணெய் ₹4 உயர்ந்துள்ள நிலையில், பாமாயில் ₹2.50, கடலை எண்ணெய் ₹2, சோயாபீன் எண்ணெய் ₹1 என உயர்ந்துள்ளன. தனது வெஜிடபிள் ஆயில் தேவையில் சுமார் 90%-ஐ இந்தியா வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது.

News March 13, 2026

தேர்தலில் போட்டியிடமாட்டேன்: வைகோ

image

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். இப்போது மட்டுமல்ல, ஒருகாலமும் பேரவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். பார்லிமென்ட்டில் மனநிறைவுடன் பணியாற்றி 1,300 முறை பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக, 3 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது.

error: Content is protected !!