News February 3, 2025
புதிய சாதனை படைத்த ரஸ்ஸல்

T20 கிரிக்கெட்டில் வெ.இண்டீஸ் அதிரடி வீரர் ரஸ்ஸல் புதிய சாதனை படைத்துள்ளார். குறைந்த பந்துகளில் 9,000 ரன்களை (5,321 பந்துகள்) கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் மேக்ஸ்வெல் (5,915 பந்துகள் உள்ளார்). ஒட்டுமொத்தமாக 9,000 ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 25-வது வீரராக இடம்பெற்றுள்ள ரஸ்ஸல், மொத்தம் 536 மேட்சுகளில் இந்த சாதனையை அடைந்தார்.
Similar News
News March 8, 2026
ஜனாதிபதியை பாஜக தவறாக பயன்படுத்துகிறது: மம்தா

மேற்குவங்கம் சென்ற தன்னை அம்மாநில CM வரவேற்கவில்லை என <<19325512>>ஜனாதிபதி திரெளபதி முர்மு <<>>கூறியது சர்ச்சையானது. இதுகுறித்து பேசிய CM மம்தா பானர்ஜி, மத்திய பிரதேசம் & சத்தீஸ்கரில் பழங்குடியினருக்கு எதிராக அட்டூழியங்கள் நடந்தபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என முர்முவுக்கு கேள்வி எழுப்பினார். பாஜக தனது சொந்த ஆதாயத்திற்காக ஜனாதிபதியை அவமதித்து தவறாக பயன்படுத்துவது தவறானது எனவும் சாடியுள்ளார்.
News March 8, 2026
மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்: அன்புமணி

ஜனாதிபதி திரவுபதி முர்முவை அற்ப அரசியல் காரணங்களுக்காக மேற்கு வங்க CM அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி சாடியுள்ளார். <<19325512>>நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதியான முர்முவை அவமதிப்பது<<>> ஒட்டுமொத்த பெண் குலத்தையும், பழங்குடியினரையும் அவமதிக்கும் செயல்; இதற்காக ஜனாதிபதியிடமும், சந்தாலி பழங்குடியினரிடமும் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 8, 2026
தொகுதி மாறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வென்று MLA, அமைச்சர், DCM என அடுத்தடுத்த பதவிகளை பெற்றார் உதயநிதி ஸ்டாலின். வரும் தேர்தலில் அவர் தனது தாத்தாவின் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தூத்துக்குடியில் பேசிய அவர், தான் எங்கு போட்டியிட வேண்டும் என்று தலைவர் முடிவு எடுக்கிறாரோ, அந்த தொகுதியில் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.


