News February 3, 2025

ஜனாதிபதி மாளிகையில் முதல் திருமணம்

image

வரலாற்றிலேயே முதல் முறையாக ஜனாதிபதி மாளிகையில் திருமணம் ஒன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள CRPF பெண் அதிகாரியான பூனம் குப்தாவின் பணியை பார்த்து இம்ப்ரெஸ் ஆன ஜனாதிபதி முர்முவே, அவரது திருமணத்தை இங்கே நடத்திக்கொள்ள சொல்லிவிட்டாராம். பூனம், காஷ்மீரில் பணியாற்றும் ராணுவ அதிகாரியை மணக்கிறார். விழாவில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்கின்றனர்.

Similar News

News March 4, 2026

தவெக கூட்டத்தில் சங்கீதா.. வைரலாகும் PHOTO

image

தஞ்சையில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய் – சங்கீதா இருவரும் இருக்கும் போட்டோவை ஒருவர் காண்பித்தது வைரலாகிறது. விவகாரத்து பற்றி இதுவரை மெளனம் கலைக்காத விஜய் பற்றி ஏற்கெனவே விமர்சனங்கள் இருக்கும் நிலையில், இதுபோன்று நடந்துள்ளது. மேலும், இக்கூட்டத்தில் <<19295194>>பெண் பாதுகாப்பு<<>> பற்றி விஜய் பேசாததற்கு, தனது தனிப்பட்ட வாழ்க்கை சிக்கலே காரணம் என்றும் SM-ல் சிலர் கூறி வருகின்றனர்.

News March 4, 2026

பாஜகவின் கொட்டமும், ஆணவமும் கூடுகிறது: CM

image

இந்தித் திணிப்பு வெறியில் பாஜக எல்லை மீறிச் செல்வதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். <<19294297>>திருச்சி மண்டல ரயில்வே<<>> அலுவலக நுழைவு வாயிலில் இந்தி, EPFO அலுவலகத்துக்கு ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயர், நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ என இந்தி திணிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கூடிக்கொண்டே செல்லும் பாஜகவின் ஆணவத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

News March 4, 2026

விவசாயிகளை தேடி வரும் அரசு திட்டம்

image

வேளாண் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் அதன் பயனையும் நேரடியாக விவசாயிகளின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்கிறது உழவரைத் தேடி வேளாண்மை திட்டம். இதன் கீழ், விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது & 4-வது வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடக்கும். விவசாயிகளே, உங்களுக்கு சந்தேகங்கள், கோரிக்கைகள் இருந்தால் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம். SHARE.

error: Content is protected !!