News February 2, 2025
ஈரோடு கிழக்கு பிரசாரம் நாளை முடிகிறது

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. அங்கு எம்.எல்.ஏவாக இருந்த இவிகேஎஸ் இளங்கோவன் மரணமடைந்ததால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவுக்காக திமுக, நாதக உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில், நாளை மாலை 6 மணிக்கு பிரசாரம் நிறைவு பெறுகிறது.
Similar News
News March 3, 2026
10-வது பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

வரும் மார்ச் 11-ம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை TN அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை பயன்படுத்தி <
News March 3, 2026
L வடிவ பாலத்தில் 4 பெரும் குறைபாடுகள்: அன்புமணி

சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம் தரமற்றது என்பதை உறுதிபடுத்தும் விதமாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ள<<19180715>> 4 காரணங்களை அன்புமணி அடுக்கியுள்ளார்.<<>> வலுவற்ற இரும்பு கம்பிகள், தரமற்ற சிமெண்ட், சீராக பரப்பப்படாத கான்க்ரீட் கலவை & ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் தூண்கள் என கூறியுள்ளார். பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு TN அரசு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளார்.
News March 3, 2026
திமுகவுடன் கூட்டணி.. வெளிப்படையாக அறிவித்தார்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து பேசிய செல்வப்பெருந்தகை, திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக விளக்கம் அளித்தார். தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் திமுக கெடு விதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


