News February 2, 2025
ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.20 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.15 லட்சமும் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்காமல் தாமதப்படுத்துவது ஏன்? என பாமக கேள்வி எழுப்பியுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க சுவரொட்டி ஒட்டி வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News March 11, 2026
விருதுநகர்: போலீசில் சிக்கிய போலி மருத்துவர்

வத்திராயிருப்பு தாலுகா அயன்கரிசல்குளம் கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் வீட்டில் வைத்து மக்களுக்கு மருத்துவம் பார்த்ததாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. இதன் அடிப்படையில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்த போது, மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து வைரமுத்துவை கைது செய்தனர்.
News March 11, 2026
115 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி ஏப்.6 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 115 மையங்களில் 11,966 மாணவர்களும், 12,526 மாணவிகளும், தனித்தேர்வர்கள் 666 பேரும் என மொத்தம் 25,158 மாணவர்கள் எழுதுகின்றனர். மேலும் தேர்வினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News March 11, 2026
விருதுநகர்: EX ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை

விருதுநகர் அருகே வரலொட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி(57). இவர் காரியாபட்டி சாலையில் வில்லிபத்திரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி கண்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


