News February 2, 2025
முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ₹4.85ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டையின் தேவை நாடு முழுவதும் அதிகரித்துள்ளதால் அதன் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் பல மாதங்களாக ₹5க்கு மேல் இருந்த மொத்த விலை தற்போது குறைந்துள்ளது. இதனால், முட்டையின் சில்லரை விலை குறைய வாய்ப்புள்ளது.
Similar News
News March 4, 2026
திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்..

IndiGo விமான பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி <<19289115>>பிரபாகரனை <<>>நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தை டிடிவி, அன்புமணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக கையில் எடுத்து, திமுகவை கடுமையாக அட்டாக் செய்தனர். சோஷியல் மீடியாவிலும் இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறிய நிலையில், பிரபாகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக தலைமை சற்றுமுன் அறிவித்துள்ளது.
News March 4, 2026
போரால் சிக்கித் தவிக்கும் ரொனால்டோ

கால்பந்து வீரர் ரொனால்டோ, போர் பதற்றம் காரணமாக சவுதியில் இருந்து குடும்பத்துடன் பிரைவேட் ஜெட்டில் வெளியேறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அது உண்மையில்லை என அல்-நாசர் எஃப்சி தெரிவித்துள்ளது. கடைசியாக நடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். எனவே இந்த நேரத்தில் அவரால் வேறு இடத்திற்கு செல்லமுடியாது என கால்பந்து க்ளப் விளக்கமளித்துள்ளது.
News March 4, 2026
பங்குச்சந்தை சரிந்தது.. மிகப்பெரிய தாக்கம்

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,723 புள்ளிகள் சரிந்து 78,521 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 476 புள்ளிகள் சரிந்து 24,600 புள்ளிகளில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.


