News February 2, 2025
முதல் ஓவரிலேயே ஷமியை அலறவிட்ட சால்ட்

நீங்க மட்டும் தான் அதிரடி காட்டுவீங்களா! நாங்களும் காட்டுவோம் என இங்கி., அணியும் தொடக்கத்திலேயே பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளது. 248 ரன்கள் இலக்கு என்பது மிகப்பெரிய சவால் என்பதை உணர்ந்து, தொடக்க வீரராக களமிறங்கியுள்ள பிலிப் சால்ட், ஷமி வீசிய முதல் ஓவரில் SIX, 2 FOUR உடன் 17 ரன்கள் குவித்துள்ளார். இதனால், இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது; இனி சிக்ஸர் மழையை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல.
Similar News
News March 18, 2026
சீமை கருவேல மரங்கள்.. கோர்ட் புதிய உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிட மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில், சீமை கருவேல மரங்களை அகற்றிட வட மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், தென்மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம் கண்காணிப்பு அலுவலர்களாக செயல்படுவர் என்றும் கோர்ட் கூறியுள்ளது. அம்மரங்களை எப்படி அகற்றுவது என்பது பற்றி 39 உத்தரவுகள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கோர்ட் தெரிவித்துள்ளது.
News March 18, 2026
சர்ச்சை பேச்சு… நயன்தாரா பதிலடி

அன்பு குறித்த ஒரு தத்துவ வரியை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக நயன்தாரா பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது. அதில், ‘மழை எங்கு, யார் மீது விழுகிறோம் என்று பார்ப்பதில்லை. அதுபோலத்தான் உங்கள் அன்பு இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேசிய Ex அமைச்சர் <<19406314>>CV சண்முகத்திற்கு<<>> தான் நயன்தாரா இப்படி சைலெண்டாக பதிலடி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
News March 18, 2026
தமிழகத்தில் ₹42.65 கோடி பணம், பொருள்கள் சிக்கின

TN-ல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த 3 நாள்களுக்குள் ₹42.65 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக CEO அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். சோதனையில் ₹2.37 கோடி ரொக்கம், ₹2.88 கோடி போதைப் பொருள்கள், ₹16.42 கோடி உயர் ரக உலோகங்கள், ₹20.80 கோடி இலவச பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரொக்கத்தை திரும்பி பெற்றுக்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.


