News February 2, 2025
இந்தியா முதலில் பேட்டிங்

இந்தியா – இங்கிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டியில் (மும்பை) டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்திருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர். இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி இப்போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக விளையாடவுள்ளார். ஏற்கெனவே 3 போட்டிகளில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 21, 2026
அறிவித்தார் சேலம் மாவட்ட ஆட்சியர்!

சட்டமன்ற தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க புகார் எண்களை மாவட்ட ஆட்சியர் /மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
1. கெங்கவல்லி, ஆத்தூர் –0427-2311038, 9500669244
2. சேலம் மேற்கு, வீரபாண்டி -0427-2311033, 9500669130
3. சேலம் வடக்கு, தெற்கு – 0427-2250075, 9500668730
4. ஏற்காடு – 0427-2311037, 9500669716
5. எடப்பாடி, சங்ககிரி – 0427-2250020, 9500668427
6. முழு மாவட்டம் – 0427-2250026, 8292136658
News March 21, 2026
கரூரில் ஜன நாயகன் ஷூட்டிங்கா? தவெக பதில்

கரூர் அசம்பாவிதத்தின்போது ‘ஜன நாயகன்’ பட ஷூட்டிங் எடுக்கப்பட்டதாக சில <<19420433>>வீடியோக்கள் <<>>வைரலாகி ஹாட் டாபிக்காக மாறியது. இந்நிலையில், அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு அங்கு ஷூட்டிங் நடந்ததா என்பது தெரியும் என்று CTR நிர்மல் குமார் பதிலளித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புரோக்கர்கள் ஏதாவது பேசுவார்கள் என்ற அவர், இந்த விஷயத்தை தாங்கள் அரசியலாக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 21, 2026
ஒரே கோயிலில் 3 ரூபங்களில் காட்சி தரும் சிவன்

பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் என 3 ரூபங்களில் சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் ஈசன் காட்சியளிக்கிறார். 3 அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். நடு அடுக்கில், தோணியப்பர் உள்ளார். 3-வது தளத்தில் சட்டநாதராக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


