News February 2, 2025

நாதகவில் இருந்து 60 நிர்வாகிகள் விலகல்

image

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து இன்று 60 நிர்வாகிகள் விலகியிருப்பதாக அவர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளனர். பெரியார் குறித்த விமர்சனம், கட்சியில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்து விலகியுள்ளனர். சேலம் தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் தமிழரசன் தலைமையில் 60 பேர் இன்று விலகினர்.

Similar News

News March 3, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 3, 2026

பாஜக மிரட்டலால் கூட்டணியில் இணைந்த கட்சிகள்: உதயநிதி

image

மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய <<19273321>>மோடி <<>>தன்னை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம் என உதயநிதியை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், பயப்பட வேண்டாம் என தங்களிடம் சொல்வதை விட, உங்கள் கூட்டணி கட்சி தலைவர்களிடம் சொல்வதே சரியாக இருக்கும் என உதயநிதி பதில் அளித்துள்ளார். பாஜகதான் பல கட்சிகளை மிரட்டி அவர்களுடன் இணைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News March 3, 2026

கல்லீரலை பாதுகாக்க இரவில் 3 விசயங்களை கடைபிடிங்க!

image

இந்தியாவில் 40% பேருக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதனை தடுக்க இந்த 3 பழக்கங்களை பின்பற்றுமாறு டாக்டர்கள் கூறுகின்றனர். அதன்படி இரவு 9 மணிக்குள்ளாக சாப்பிட வேண்டும். இதனால் கல்லீரலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். புரத சத்து உணவை உண்பதும், சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் நடப்பதும் கல்லீரலுக்கு ஆரோக்கியம் தரும் என அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!