News February 2, 2025
தமிழகத்தில் மேலும் 6 தோழி மகளிர் விடுதிகள்!

ரூ.70 கோடியில் மேலும் 6 தோழி மகளிர் விடுதிகள் அமைக்க அரசு டெண்டர் கோரியுள்ளது. இதில், சென்னையில் 2 விடுதிகளும், கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு விடுதியும் அமையவுள்ளன. இதன் மூலம் 1,200 பெண்கள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. கல்வி, பணிக்குச் செல்லும் பெண்கள் மலிவு விலையில் தங்கும் வகையில் ஏற்கனவே 11 விடுதிகளை அரசு திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 2, 2026
சீமானுடன் இணைந்தார்.. முதல் ஆளாக ஆதரவு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாதகவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய பேரியக்கம் அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்றது. அதில், தமிழ் தேசியத்தை காக்க நாதகவுக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கிட பெரும் ஊக்கமாக அமைகிறது என சீமான் வரவேற்றுள்ளார்.
News March 2, 2026
இஸ்ரேல் பக்கம் நிற்கும் மோடிக்கு நன்றி: நெதன்யாகு

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக PM மோடியுடன் நெதன்யாகு பேசியுள்ளார். தனது இனிய நண்பர் மோடியுடன் பேசியதாகவும், எங்கள் பக்கம் நிற்கும் அவருக்கு நன்றி எனவும் நெதன்யாகு கூறியுள்ளார். கடந்த மாதம் 2 நாள் பயணமாக இஸ்ரேல் சென்ற PM மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 2, 2026
FLASH: தங்கம் விலையில் தடாலடி மாற்றம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $66 உயர்ந்து $5,344-க்கு விற்பனையாகிறது. ஆனால் வெள்ளியின் விலை $3 குறைந்து $90-க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று இந்திய சந்தையில் குறைந்திருந்த தங்கம் விலை நாளை தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது


