News February 2, 2025
காட்பாடி ரயில் நிலையம் அருகே ரயில் மோதி மூதாட்டி பலி

காட்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 60 வயது தக்க மூதாட்டி அவ்வழியாக சென்ற சரக்கு ரயில் மோதி அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலிஷ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 21, 2025
ஆம்பூர் அருகே மதுபானம் விற்பனை செய்தவர் கைது

திருப்பத்தூர், ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் நேற்று (ஏப்ரல் 20) உமராபாத் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியவரிகம் பகுதியில் வீட்டிற்குள் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த கோபி என்பவரை உமராபாத் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News April 21, 2025
ஏரியில் குளிக்கச் சென்றன் மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

திருப்பத்தூரை சேர்ந்த ஆர்யா (12) என்ற மாணவர் பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்யா, திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News April 20, 2025
திருப்பத்தூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

▶️வட்டாட்சியர்,வாணியம்பாடி – 9445000512
▶️வட்டாட்சியர்,திருப்பத்தூர் – 9445000511
▶️வட்டாட்சியர்,திருப்பத்தூர்- 9445000511
▶️வட்டாட்சியர், நாட்றம்பள்ளி – 9384095150
▶️வட்டாட்சியர், ஆம்பூர் – 9443000478
▶️தாசில்தார், திருப்பத்தூர் – 9944853282
▶️வட்டாட்சியர், திருப்பத்தூர் – 9600883699
▶️தாசில்தார், வாணியம்பாடி – 7904947335
▶️மண்டல வட்டாட்சியர்,திருப்பத்தூர் – 9047228349
SHARE பண்ணுங்க மக்களே