News February 2, 2025
வீடு-வீடாக ரூ.3,000… கெஜ்ரிவால் விமர்சனம்

டெல்லியில் வாக்குக்காக வீடு- வீடாக பாஜக ரூ.3,000 விநியோகம் செய்து வருவதாக ஆம் ஆத்மி புகார் தெரிவித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரசாரம் செய்யும் அரசியல் கட்சியினர், பரஸ்பரம் பிற கட்சிகள் மீது விமர்சனம் செய்கின்றனர். அந்த வரிசையில், குடிசை பகுதியில் பாஜக ரூ.3,000 அளித்து வருவதாகவும், அதை வாங்கி கொண்டு ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கும்படியும் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News March 14, 2026
தள்ளுபடி.. CM ஸ்டாலின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு தமிழக அரசு சர்ப்ரைஸ் மானியம் அறிவித்துள்ளது. சிலிண்டர் பிரச்னை உள்ளவரை ஹோட்டல்கள், டீ கடைகளுக்கு மின்சாரம் யூனிட்டுக்கு ₹2 மானியம் வழங்கப்படும் என்றும், வீடுகளில் சமைத்து உணவு விற்போருக்கும் இந்த மின் கட்டண சலுகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 14, 2026
பெட்ரோல் பங்க்குகளில் மண்ணெண்ணெய்

வளைகுடா போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மண்ணெண்ணெய் விற்பனைக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையகங்களில் தலா 2,500 லிட்டர் மண்ணெண்ணெயை ஒரு மாத காலத்துக்கு சேமித்து வைக்கவும் அனுமதி அளித்துள்ளது.
News March 14, 2026
BREAKING: வைரமுத்துவுக்கு ஞான பீட விருது

கவிஞர் வைரமுத்துவுக்கு இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞான பீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு எனப் போற்றப்படும் ஞான பீட விருது, தமிழ் மொழியில் அகிலன், ஜெயகாந்தன் ஆகியோருக்கு மட்டுமே கிடைத்திருந்தது. தற்போது, 12 கவிதை தொகுப்புகள், 10 நாவல்கள், 2 ஆராய்ச்சி கட்டுரைகளை வைரமுத்து நிறைவு செய்துள்ள நிலையில், வாழ்நாள் இலக்கிய பங்களிப்பிற்காக அவர் கவுரவிக்கப்பட்டுள்ளார்.


