News February 2, 2025
தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா

இந்தியாவிற்கு எதிரான உலகக்கோப்பை U19 மகளிர் T20 இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 82 ரன்னில் ஆல் அவுட்டாகியுள்ளது. அதிகபட்சமாக Mieke van Voorst 23 ரன்களை அடித்தார். இந்திய அணி தரப்பில் கோங்காடி த்ரிஷா 3 விக்கெட்டுகளும், பருணிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 83 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கும் இந்தியா கோப்பையை கைப்பற்றுமா?
Similar News
News September 7, 2025
அபர்ணா தாஸின் ஆல்டைம் ஸ்டன்னிங் லுக்ஸ்

கண்களாலேயே தனது உள்ளார்ந்த உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்துவதில் கெட்டிக்காரர் தான் அபர்ணா தாஸ். ஸ்மைலிங்கான லுக், ஸ்டன்னிங் காஸ்ட்யூம் & லைட் மேக்கப் உடன் அவர் வெளியிட்ட போட்டோஸுக்கு ரசிகர்கள் ஹார்ட்ஸை (ஹார்ட்டின்கள்) கொடுத்து வருகின்றனர். இவரது நடிப்பில் வெளியான ‘டாடா’ படம், அவரை குடும்ப ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது எனலாம். அபர்ணாவிடம் உங்களுக்கு பிடித்தது எது?
News September 7, 2025
TET தேர்ச்சி கட்டாயம்: ஆக்ஷனில் பள்ளிக்கல்வித்துறை

பள்ளி ஆசிரியர்கள் TET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று SC தீர்ப்பளித்தது. இதனால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியர்களின் பணி கேள்விக்குறியானது. ஆனால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், TET தேர்வில் தேர்ச்சி பெற்ற, பெறாத ஆசிரியர்கள் விவரங்களை கணக்கெடுக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.
News September 7, 2025
வாக்குச்சீட்டை கண்டு பாஜக பயப்படுவது ஏன்? காங்.,

கர்நாடகாவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பரிந்துரைக்க அம்மாநில காங்., அரசு முடிவு செய்துள்ளது. இது கற்காலத்துக்கு கொண்டு செல்வதாக பாஜக குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், வாக்குச்சீட்டை கண்டு பாஜக பயப்படுவது ஏன்? என CM சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக, வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக காங்., தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.