News March 28, 2024
தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராராந்திமங்கலத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு கோலப்போட்டி (ம) மெஹந்தி போட்டி யை திட்ட இயக்குனர் முருகேசன் துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் உதவி திட்ட அலுவலர் இந்திராணி, வட்டார இயக்க மேலாளர் அறிவு நிதி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
Similar News
News January 17, 2026
நாகை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
நாகை: கடன் தொல்லை நீங்க, இந்த கோவில் போங்க..

நாகை மாவட்டம், அகஸ்தியன் பள்ளி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் மூலவர்களான அகத்தீஸ்வரரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி, வாழ்வில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!
News January 17, 2026
நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


