News March 28, 2024

திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேக விழா

image

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 11வது நாளான நேற்று இரவு கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சூரனை வென்ற முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News February 27, 2026

மதுரை: சிறுவன் மர்மமான முறையில் மரணம்

image

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மங்கி லால் கடந்த 10 ஆண்டுகளாக மதுரை சர்வேயர் காலையில் தங்கி இருந்து பொம்மை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் சோட்டாராம்(16) கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இந்நிலையில் சாத்தையார் ஓடை வடகரை அருகே ஓட்டு வீட்டில் சிறுவன் தூக்கில் பிணமாக கிடப்பதாக கே.புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று உடலை கைப்பற்றி மர்ம சாவு குறித்து விசாரிக்கின்றனர்.

News February 27, 2026

மதுரை சிறையில் சினிமா பாணியில் நடந்த சம்பவம்

image

மதுரை சிறையில் அட்டை தயாரிப்பு பிரிவு அருகே கருப்பு டேப் சுற்றிய பந்து கண்டுபிடிக்கப்பட்டது. காவலர் பாலசங்கர் திறந்ததில் 85 கிராம் கஞ்சா, பெயர் தெரியாத 26 மாத்திரைகள், சிறிதளவு புகையிலை இருந்தது. இதுவரை அதிகபட்சம் 25 கிராம் மட்டுமே வீசப்பட்ட நிலையில், முதல்முறையாக அதிகளவு மற்றும் மாத்திரைகள் வீசப்பட்டதால், வெளியில் இருந்து எறியப்பட்டதாக சந்தேகித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News February 27, 2026

மதுரை மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (26.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!