News February 2, 2025

டான் டிரம்புக்கே டஃப் கொடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ

image

கனடா நாட்டின் பொருட்களுக்கு டிரம்ப் விதித்த வரிக்கு எதிராகக் கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளது. இதனால், டான் டிரம்புக்கே ஜஸ்டின் ட்ரூடோ சவால் விடுப்பதாக, அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 25% வரி விதித்திருந்த நிலையில், வரிப் போர்(Tax War) தொடங்கியுள்ளது.

Similar News

News March 9, 2026

BREAKING: விஜய் நேரில் ஆஜராக CBI சம்மன்!

image

‘ஜன நாயகன்’ படத்தை மறுஆய்வு செய்வதை, ரிவைசிங் கமிட்டி திடீரென ரத்து செய்த நிலையில், விஜய்க்கு அடுத்த புதிய சிக்கல் வந்துள்ளது. கரூர் விவகாரத்தில் நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தவெக வேட்பாளர்கள் நேர்காணல் இருப்பதால், சிபிஐ விசாரணையை 10 நாள்கள் தள்ளிவைக்க கோரியதாக தகவல் வெளியான நிலையில், விஜய்யை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

News March 9, 2026

வெறும் ₹10,000 ரூபாய்.. தமிழக அரசின் பீச் வெட்டிங் திட்டம்

image

கடற்கரையில் திருமண நிகழ்வுகள் ஒரு கனவு போன்ற அழகிய அனுபவமாகும். தங்களின் திருமணத்தையும் கடற்கரையில் நடத்த முடியாதா என ஏங்கி தவிப்பவர்களுக்கு பீச் வெட்டிங் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ₹10,000 செலுத்தி www.ttdconline.com-ல் முன்பதிவு செய்தால் போதும் அழகிய கடற்கரையோரங்களில் திருமணங்களை நடத்தலாம். மேலும், உணவு, ரூம் போன்றவற்றிற்கு குறைந்த அளவில் தனிக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

இமயமலை ஒருகாலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததா?

image

உலகின் மிக உயரமான மலைச் சிகரம் எவரெஸ்ட் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையில் ‘டெதிஸ்’ என்ற கடல் இருந்ததாகவும், அதனால்தான் எவரெஸ்ட் பாறைகளில் கடல் உயிரினங்களின் புதைப்படிவங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், நிலப்பரப்புகள் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததற்கு இது வலுவான சான்று என கூறுகின்றனர்.

error: Content is protected !!