News March 28, 2024
நூதன முறையில் வாக்கு சேகரித்த ஐ. பெரியசாமி!

திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சி முருகபவனம் பகுதிகளில் நேற்று சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம் என்றார்.
Similar News
News November 3, 2025
திண்டுக்கல் அருகே முளைத்த அதிசய காளான்!

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள பூசாரிபட்டி கிராமத்தில் ஒரு விவசாயத் தோட்டத்தில் சுமார் 13 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான காளான் முளைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வளவு பிரம்மாண்டமான காளான் முளைத்தது இதுவே முதல்முறை என்பதால், பூசாரிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து இந்தக் காளானை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
News November 3, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 2) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம், பழனி,ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
News November 3, 2025
திண்டுக்கல் மாவட்ட போலீசார் சார்பில் விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்கள் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வீட்டுகள், கடைகள், பொதுத்தளங்களில் சிசிடிவி கேமிரா பொருத்துவது குறித்தும் “சிசிடிவி கேமிரா பொருத்துவோம், பாதுகாப்பாக இருப்போம்” என்ற செய்தியையும் பகிர்ந்து வருகின்றனர். குற்றங்களைத் தடுப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம் எனவும் போலீசார் வலியுறுத்துகின்றனர்.


