News February 2, 2025

1 ரூபாய்க்கு ரூ.60,000 வருமான வரி

image

மத்திய அரசின் பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு புதிய வருமான வரி திட்டத்தில் வரி கிடையாது. அதேநேரத்தில், ரூ.12 லட்சத்துக்கு மேல் ஒரு ரூபாய் வருமானம் கூடினாலும், ரூ.60,000 வரி செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News March 11, 2026

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சில டிப்ஸ்!

image

*படிக்கும்போது முக்கிய Formulas அனைத்தையும் எழுதி படிப்பது மனதில் ஆழப் பதியும். *தேர்வு நாள்களில் சரியான நேரத்தில் சாப்பாடு, 6-7 மணி நேரம் தூங்குவது ஞாபக சக்தியை அதிகரிக்கும். *தேர்வுக்கு முன் பதற்றத்தைத் தவிர்க்க <<8036229>>Breathing Exercise<<>> பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்தும். *தேர்வு சமயத்தில் TV, செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள். வாழ்த்துகள்! SHARE IT.

News March 11, 2026

யாருடன் கூட்டணி? கிருஷ்ணசாமி முக்கிய முடிவு!

image

முக்கிய கட்சிகளில் புதிய தமிழகம் மட்டுமே இன்னும் தனது கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணசாமியிடம் திமுக, பாஜக, தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அண்மைக் காலமாக ஆட்சியில் பங்கு விவகாரத்தை அதிகம் பேசி வரும் கிருஷ்ணசாமி, தவெகவுக்கு செல்ல உள்ளதாகவும் பேச்சு எழுந்தது. இதனிடையே, கோவையில் உள்ள தனது கட்சி அலுவலகமான பொதிகை இல்லத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

News March 11, 2026

தமிழ் வில்லன் நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

பிரபல நடிகர் தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த இவர், கமல் நடித்த சூரசம்ஹாரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். அவரது மறைவிற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இறுதி சடங்குகள் இன்று பெங்களூரிலேயே நடைபெறவுள்ளன.

error: Content is protected !!