News February 2, 2025
சேத்தியாத்தோப்பு: பாலத்தில் மது அருந்தியவர் தவறி விழுந்து பலி

சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவியை சேர்ந்தவர் வனத்தையன் மகன் பரிசுத்தராஜா. இவர் நேற்று முன்தினம் மாலை அகரபுத்துார் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி விழுந்து பரிசுத்தராஜா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சோழதரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 1, 2026
காடாம்புலியூர் அதிமுக நிர்வாகி உயிரிழப்பு: EPS இரங்கல்

பண்ருட்டி பணிக்கன்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் A. வேலு காடாம்புலியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தையும் இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
News March 1, 2026
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News March 1, 2026
கடலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


