News February 2, 2025
இன்று Sunday டபுள் டமாக்கா

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று 2 ஞாயிறு விருந்து உள்ளது. U19 மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் IND vs SA இன்று மோத உள்ளன. மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. அதேபோல், ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்ற சூர்யகுமார் யாதவ்வின் படை, இன்று இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கும். இந்த இரு போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பார்க்கலாம்.
Similar News
News March 13, 2026
அதிமுகவுடன் விஜய் கூட்டணி.. பரபரப்பு தகவல்

திமுகவை வீழ்த்த கூட்டணிக்கு செல்லும் முடிவை தவெக எடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. புஸ்ஸி ஆனந்த நடத்திய மா.செ., கூட்டத்தில், கூட்டணி செல்வதால் தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, விஜய் வெல்ல வேண்டும் என பலரும் கூறினார்களாம். அத்துடன், கூட்டணியில் 50-60 சீட்கள்+விஜய்க்கு DCM பதவி கிடைத்தால் நல்லது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் தனித்து போட்டியிடவும் அறிவுறுத்தினராம்.
News March 13, 2026
இவருடைய கட்சியில் தான் சசிகலா சேர்ந்துள்ளார்!

இன்று சசிகலா <<19370263>>அஇபுதமமுக<<>> என்ற கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இக்கட்சியை எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பி.சக்கரவர்த்தி என்பவர் தொடங்கி இருந்தார். மதுரையை சேர்ந்த இவர், 2012-ல் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ளார். 2016-ல் இந்த கட்சியைத் தொடங்கி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து வைத்துள்ளார்.
News March 13, 2026
வங்கிக் கணக்கில் மேலும் ₹6,000.. CM ஸ்டாலின் அறிவிப்பு

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) ஊதியத்தை மேலும் ₹6,000 உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, BLO-க்களின் ஆண்டு ஊதியம் ₹6,000-ல் இருந்து ₹12,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊக்கத் தொகையை ₹2,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. BLO ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உயர்வுக்காக ₹99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


