News February 2, 2025

பிஹார் ‘மக்கானா’.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா!

image

பிஹாரில் ‘மக்கானா’ வாரியம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனுடைய பண்புகள் கவனம் பெற்றுள்ளன. தாமரையில் உள்ள வெள்ளை நிறத்திலான உண்ணக்கூடிய விதைதான் மக்கானா. இதில் உள்ள நார்ச்சத்து எடைக்குறைப்பிற்கு உதவுகிறது. சோடியமும், மெக்னீசியமும் இதய ஆரோக்யத்திற்கு சிறந்தது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்தியாவில் பிஹாரில் தான் இது 90% உற்பத்தி செய்யப்படுகிறது.

Similar News

News March 19, 2026

விடுமுறை .. சற்றுமுன் புதிய அறிவிப்பு வெளியானது

image

தமிழக பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் அரசு & தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறையை ECI வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை விடுமுறை அளிக்கவில்லையென்றால் 1950 என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.

News March 19, 2026

சாதி இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும்: நாதக வாக்குறுதி

image

நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், *சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும். *தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி. *மணல் கொள்ளையை தடுக்க தனிப்படை. *நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் உள்ளிட்ட <<19423818>>பல வாக்குறுதிகள்<<>> இடம் பெற்றுள்ளன.

News March 19, 2026

சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணியா?

image

சசிகலாவுடன் இணைந்து ராமதாஸ் தரப்பு தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி முட்டுக்கட்டை போட்டார். திமுக கூட்டணியில் இணையவும் ஆதரவாளர்கள் விரும்பாததால், தவெகவுடன் கூட்டணி வைக்க பலர் ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவுடன் இணைந்து வட மாவட்டங்களில் 40 இடங்களில் நிற்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளாராம்.

error: Content is protected !!