News February 2, 2025

நான் மட்டுமே இதற்கு காரணம் இல்லை: சச்சின்

image

வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற சச்சின், 24 ஆண்டுகளாக நீடித்த தனது கிரிக்கெட் பயணம், ஒருபோதும் தன்னுடையதாக இல்லை என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பயிற்சியாளரின் வழிகாட்டுதல், அணியினரின் நம்பிக்கை, ரசிகர்களின் ஆதரவு, குடும்பத்தின் தியாகத்தால் நிறைந்தது என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ரசிகர்களுக்கும், விளையாட்டிற்கும் தான் திருப்பி கொடுக்க வேண்டியதை இந்த விருது உணர்த்துவதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News March 24, 2026

இன்றைய நல்ல நேரம்

image

மார்ச் 24, பங்குனி 10 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சஷ்டி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News March 24, 2026

கோடை வந்தாச்சு.. இதோ சில டிப்ஸ்!

image

➤கோடையில் சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளில் தப்பிக்க நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ➤உடலுக்கு குளிர்ச்சி தரும் நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிடுவது அவசியம். ➤இரவில் பனங்கற்கண்டு கலந்து பால் அருந்தினால் உடல் சூடு தணியும். ➤பகலில் கொத்தமல்லித் தழையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். ➤கண்களின் நலனுக்கு பப்பாளி பழம் சாப்பிடலாம்.

News March 24, 2026

சுங்​கச்​சாவடி கட்​ட​ணம் உயர்கிறது

image

தமிழகத்​தில் 60 சுங்​கச்​சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5% சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னை – கன்​னி​யாகுமரி, திருச்சி – சேலம், சேலம் – கோவை உள்​ளிட்ட தேசிய நெடுஞ்​சாலைகள் உள்ள சுங்கச் சாவடிகளில் இந்த கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது. ஏற்கெனவே போர் சூழலால் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!