News February 2, 2025
எப்போதுமே அஸ்வின் ”SPECIAL”…. AWARD

2023-24ஆம் ஆண்டிற்கான BCCIயின் சிறப்பு விருது அஸ்வினுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ஜொலித்த அவர் சமீபத்தில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். இந்த சிறந்த விருது அவரின் கைக்கு கிடைத்ததன் மூலம், கிரிக்கெட்டில் இருந்து அவர் விடை பெற்றாலும், அவரை கிரிக்கெட் விடப்போவதில்லை என்று பதிவிட்டு நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
கமேனியின் பேத்தியும் உயிரிழப்பு (PHOTO)

இஸ்ரேல், USA நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கமேனி, அவரது மகள், மருமகன் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், கமேனியின் ஒன்றரை வயது பேத்தி ஜஹ்ரா முகமதியின் போட்டோ SM-ல் வைரலாகி வருகிறது. உலகில் உதிர்ந்த கொஞ்ச நாள்களிலேயே எந்தவித தவறும் செய்யாத அந்த குழந்தை இறந்தது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். முன்னதாக, கமேனி தங்கியிருந்த பகுதியில் 30 ஏவுகணைகள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
இனியாவது திருந்துமா திமுக அரசு? நயினார்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி அளிப்பது பற்றி TN அரசு மார்ச் 4.ல் பதிலளிக்க மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதை X பதிவில் சுட்டிக்காட்டியுள்ள நயினார், திமுக அரசு தனது தவறை உணர்ந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இனியும் இந்துக்களின் உரிமையை முடக்க திட்டமிட்டால், கோர்ட் வழங்கும் இறுதிதீர்ப்பின் போது திமுக அரசு முற்றிலும் முடங்கும் என கூறியுள்ளார்.
News March 3, 2026
PM மோடி பொன்மொழிகள்!

*விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்வது தான் ஜனநாயகத்தின் அடித்தளம். விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது *நம் ஒவ்வொருவரிடமும் நற்பண்புகளும் உள்ளன; தீயப் பண்புகளும் உள்ளன. நற்பண்புகள் மீது கவனம்செலுத்தி உழைப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறுகிறார்கள் *எதையாவது கனவு காண்பதற்குப் பதிலாக, மிகச் சிறந்தவற்றைச் செய்ய வேண்டுமென்று கனவு காணுங்கள்.


