News February 1, 2025
கிளர்ச்சியாளர்கள் பிடியில் 80% நாடு

மியான்மார் நாட்டின் 80% நிலப்பகுதி, அரசு எதிர்ப்பு படைகளின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு உள்நாட்டுப் போர் நடந்துவரும் நிலையில், 95 நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் 21% பகுதி மட்டுமே உள்ளது. பல ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப் போரில், இதுவரை 50,000-க்கு அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News March 2, 2026
சீமானுடன் இணைந்தார்.. முதல் ஆளாக ஆதரவு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாதகவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய பேரியக்கம் அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்றது. அதில், தமிழ் தேசியத்தை காக்க நாதகவுக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கிட பெரும் ஊக்கமாக அமைகிறது என சீமான் வரவேற்றுள்ளார்.
News March 2, 2026
இஸ்ரேல் பக்கம் நிற்கும் மோடிக்கு நன்றி: நெதன்யாகு

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக PM மோடியுடன் நெதன்யாகு பேசியுள்ளார். தனது இனிய நண்பர் மோடியுடன் பேசியதாகவும், எங்கள் பக்கம் நிற்கும் அவருக்கு நன்றி எனவும் நெதன்யாகு கூறியுள்ளார். கடந்த மாதம் 2 நாள் பயணமாக இஸ்ரேல் சென்ற PM மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 2, 2026
FLASH: தங்கம் விலையில் தடாலடி மாற்றம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $66 உயர்ந்து $5,344-க்கு விற்பனையாகிறது. ஆனால் வெள்ளியின் விலை $3 குறைந்து $90-க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று இந்திய சந்தையில் குறைந்திருந்த தங்கம் விலை நாளை தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது


