News February 1, 2025
அன்பு மழையில் விடைபெற்றார் ரித்திமான் சஹா

இந்தியாவின் ஸ்டார் வீரர் ரித்திமான் சஹா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பெங்கால் அணிக்காக தன்னுடைய கடைசி ரஞ்சிப் போட்டியில் விளையாடிய அவரை, சக வீரர்கள் தூக்கிவந்து விடை கொடுத்தனர். அப்போது மைதானத்தில் இருந்த அவரின் ரசிகர்கள் ஒருவர் ‘I LOVE Wriddhiman Saha’ பேனரை காட்டி அன்புடன் வழி அனுப்பி வைத்தார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.
Similar News
News March 6, 2026
‘US தாக்கினால் இந்தியாவை குறை சொல்ல முடியாது’

ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்று பாஜக தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். அவரது X பதிவில், இச்சம்பவம் இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 250 nautical miles தூரத்தில், சர்வதேச கடலில் நடந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச கடல் சட்டப்படி அந்த பகுதியில் நடந்த செயல்களுக்கு இந்தியாவுக்கு பொறுப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
News March 6, 2026
BREAKING: கவர்னர் RN ரவி மாற்றம்!

தமிழக கவர்னராக இருந்த RN ரவி மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ஆளுநராக இருந்த <<19306734>>ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா<<>> செய்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
News March 6, 2026
PhonePe-ல் பயோமெட்ரிக் முறை

UPI பேமெண்ட்க்கு பயோமெட்ரிக் முறையை PhonePe அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை PIN மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில், இனி Fingerprint அல்லது Face recognition வைத்து பேமெண்ட் செய்யலாம். இந்த பயோமெட்ரிக் முறை ₹5000 வரை பரிவர்த்தனைக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. உங்களிடம் PhonePe செயலி இருந்தால் உள்ளே சென்று பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி பாருங்க.


