News March 28, 2024

கிட்னியை காக்கும் பெரு நெருஞ்சில் குடிநீர்

image

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கிட்னியை தூய்மைப்படுத்த பெரு நெருஞ்சில் குடிநீரை பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். கைப்பிடி அளவு பெரு நெருஞ்சில் செடியை வேருடன் எடுத்து, சுத்தம் செய்து 2 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சி குடிநீராக பருகலாம். இந்த குடிநீரை 7 நாள்கள் குடித்தால் போதும், ரத்தம் சுத்தமாவதுடன் கிட்னியில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறிவிடுமாம்.

Similar News

News March 21, 2026

BREAKING: விலகுவதாக அறிவித்தார் டிடிவி தினகரன்

image

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பின் பேட்டியளித்த TTV தினகரன், வரும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷாவை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்த அவர், பிஹாரில் NDA ஒற்றுமையாக செயல்பட்டு வென்றதை போல தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவது பற்றி ஆலோசித்ததாக குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு செல்வது தவறில்லை எனவும் TTV தினகரன் தெரிவித்தார்.

News March 21, 2026

எல்லாவற்றிலும் முந்தும் சீமான்

image

மார்ச் 23 முதல் முதற்கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை சீமான் மேற்கொள்ளவுள்ளார். திருத்தணி முருகனை தரிசித்துவிட்டு பரப்புரையை தொடங்கும் அவர், மார்ச் 28-ல் ஆவடியில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே 234 தொகுதிகளுக்கும் சீமான் வேட்பாளர்களை அறிவித்தார். சமீபத்தில் நாதக தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறார்.

News March 21, 2026

மனைவி வேறு ஒருவருடன் சென்றால்… ஐகோர்ட் அதிரடி

image

தென்காசியை சேர்ந்த நபர், தனது மனைவி, இரு குழந்தைகளை மீட்கக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த மதுரை ஐகோர்ட், மனைவி வேறு ஒருவருடன் செல்ல முடிவெடுத்தால், ஆட்கொணர்வு மனு மூலம் அவரை கட்டாயப்படுத்தி மீட்க நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கூறியுள்ளது. எனினும், குழந்தைகளையும் மனைவியையும் கோர்டில் ஆஜர்படுத்தவும் (குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்த) உத்தரவிட்டது.

error: Content is protected !!