News March 28, 2024

காவிரி நீர் விவகாரம் குறித்து மனந்திறந்த சிவராஜ்குமார்

image

காவிரி நீர் விவகாரத்தில் இரு மாநில விவசாயிகளின் நலன்கள் பாதிக்காத வகையில் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று நடிகர் சிவராஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “முந்தைய கசப்பான அனுபவங்கள் மீண்டும் நிகழக் கூடாது. நீதிமன்றங்களும் இந்தப் பிரச்னைக்கு முடிவெடுக்கவேண்டும். அவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நானும் என் மனைவியும் ஆதரவாக இருப்போம்” என்றார்.

Similar News

News February 2, 2026

டிமாண்டை ஏற்றிக்கொண்டே போகிறதா காங்கிரஸ்?

image

திமுகவிடம் வரும் தேர்தலுக்கு மட்டுமல்லாமல், 2029 தேர்தலுக்கும் சேர்த்து ராகுல் டீல் பேசியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, கொள்கைகளை செயல் வடிவம் ஆக்க அதிகாரத்தில் பங்கு முக்கியம் என்ற அவர், இப்போதே லோக்சபா தேர்தலுக்கு 15 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என உத்தரவாதம் கேட்கிறாராம். இதனால் திமுக சற்று டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.

News February 2, 2026

தேமுதிக வைத்த டிமாண்ட்.. டென்ஷனில் திமுக, அதிமுக

image

கூட்டணியில் தேமுதிகவை இணைக்க திமுக, அதிமுக தயக்கம் காட்டுவதற்கு, பிரேமலதா வைக்கும் டிமாண்டே காரணமாம். 20 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் என்ற டிமாண்டுக்கு, அதிமுக 6-10 தொகுதிகள் தரலாம் என்றும், அதைவிட குறைவான எண்ணிக்கையே சாத்தியம் எனவும் திமுக தலைமை கூறியதாம். இதனிடையே, பிரேமலதாவை DCM ஆக்குவோம்; நாங்கள் இன்றி ஆட்சியமைக்க முடியாது என LK சுதீஷ் பேசியது இருபெரிய கட்சிகளுக்கும் எரிச்சலை தந்துள்ளதாம்.

News February 2, 2026

திமுகவில் இணைந்தார்.. அன்புமணி அதிர்ச்சி

image

வன்னியர் பாதுகாப்பு பேரியக்க தலைவர் செந்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். புதுவை திமுக தேர்தல் பொறுப்பாளரும், MP-யுமான ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டில் இந்த இணைப்பு நடந்துள்ளது. வரும் தேர்தலில் புதுவையில் திமுக- காங்., கூட்டணி ஆட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களுடன் மாற்றுக் கட்சியினரை தங்கள் வசம் இழுத்து வருகின்றனர். செந்தில் திமுகவில் இணைந்தது அன்புமணி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

error: Content is protected !!