News March 28, 2024
105 கோடி மெட்ரிக் டன் உணவை வீணடித்த உலகம்

2022 இல் உலகளவில் 105 கோடி மெட்ரிக் டன் (19%) உணவுப் பொருள்கள் வீணடிக்கப்பட்டதாக ஐ.நா சபை (சுற்றுச்சூழல் பிரிவு) தெரிவித்துள்ளது. உணவு வீணடிக்கப்படுவது குறித்த அதன் அறிக்கையில், “உலகம் முழுவதும் 78 கோடி பேர் நாள்பட்ட பட்டினியை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் 79 கிலோ உணவை வீணாக்குகின்றனர். உணவை வீணாக்குவதில் வீடுகள் 60% பங்கு வகிக்கின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
குமரி: பெண் மீது ஆட்டோ மோதி விபத்து

அம்பேற்றன் காலை பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வதி (35). இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் தெற்றிகுழி ஜங்ஷனில் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது சிதறால் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (41) என்பவரது லோடு ஆட்டோ மோதியதில் அஸ்வதி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பளுகல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 27, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹520 குறைந்தது

நேற்று வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று (ஜன.27) குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹65 குறைந்து ₹14,960-க்கும், சவரன் ₹520 குறைந்து ₹1,19,680-க்கும் விற்பனையாகிறது. நேற்று 1 கிராம் ₹15,000-ஐ கடந்து விற்பனையான நிலையில், இன்று விலை குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News January 27, 2026
ஜல்லிக்கட்டு வீரர் உயிரிழந்தால் ₹10 லட்சம்: EPS

நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை EPS தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழக்கும் வீரரின் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கெனவே சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என CM ஸ்டாலின் பொங்கலின்போது அறிவித்திருந்தார்.


