News February 1, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு

கோவை- சோரனூர் பயணியர் ரயில் (56603) நாளை (பிப்.02) மாலை 04.25 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாலக்காடு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்; பாலக்காடு- சோரனூர் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பாலக்காட்டில் இருந்து சோரனுக்கு இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News March 6, 2026
சேலம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

சேலம் மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 6, 2026
சேலம் ஓமலூர் அருகே பயங்கரம்!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது இடது பக்க இடுப்பு, வலது பக்க விலா எலும்பில் மச்சம் உள்ளது. அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 6, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்டத்தில் இரத்த சோகை விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழா மார்ச் 10-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. முன்னதாக மார்ச் 7-ல் ஊராட்சிகளிலும், 9-ல் வட்டாரங்களிலும், மார்ச் 9 மற்றும் 12-ல் விற்பனை கண்காட்சிகளும் நடைபெறவுள்ளது. இதில் விற்பனையாளர்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என சேலம் கலெக்டர் அறிவித்துள்ளார்.


