News February 1, 2025
ஏப்ரலில் குத்துச்சண்டை போட வரும் தனுஷ்

தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் ஏப்.10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு போஸ்டரில் அருண்விஜய் பாக்ஸர் தோற்றத்தில் செம மாஸாக அமர்ந்திருக்க, அவருக்கு பின்னால் தனுஷ் கோச் கெட்டப்பில் கோபமான முகபாவனையுடன் நிற்கிறார். குடும்ப பின்னணியில் உருவாகும் கிராமத்து படம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர் மூலம் செம ஆக்ஷன் மூவி போல் தெரிகிறது.
Similar News
News March 18, 2026
2 LPG கப்பல்கள் ஒரு நாளைக்கு மட்டும்தான்: ப.சிதம்பரம்

2 கப்பல்களில் இந்தியா வந்தடைந்த <<19380633>>LPG<<>> ஒன்றரை நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், போர் பதற்றத்திற்கு நடுவே ஹார்முஸ் நீரிணையை கடந்து 2 கப்பல்களும் 92,700 மெட்ரிக் டன் LPG-ஐ இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளன. இது நாட்டின் தற்போதைய தேவையில் 1.25 அல்லது 1.6 நாள்களுக்கு மட்டுமே போதுமானது என்று கூகுள் தரவுகளை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
News March 18, 2026
தூங்கிய மக்கள்.. இடமாற்றம் செய்த அரசு

கஜகஸ்தானின் கலாச்சி கிராம மக்களுக்கு 2013-ல் திடீரென பல நாள்கள் தூங்கும் விசித்திர நோய் பரவியது. மக்கள் எப்போது, எப்படி தூங்குகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், பல நாள்கள் தூங்கிக் கொண்டே இருந்துள்ளனர். இதனால் 2015-ல், மக்களை அக்கிராமத்திலிருந்து அரசு வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்தது. இதற்கான காரணம் குறித்து பல ஆய்வுகள் நடந்தாலும், தெளிவான விளக்கம் தற்போதுவரை கிடைக்கவில்லை.
News March 18, 2026
ஹிந்தியில் கடிதம்.. கோபத்தில் துரை வைகோ

சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து TN லோக்சபா உறுப்பினர்களுக்கு ஹிந்தியில் கடிதம் அனுப்பப்பட்டதற்கு துரை வைகோ MP கண்டனம் தெரிவித்துள்ளார். பல தலைமுறைகளாக ஹிந்தி திணிப்பை தமிழகம் எதிர்த்து வரும் சூழ்நிலையில், இச்செயல் ஹிந்தி திணிப்புக்கு சான்றாக மாறி உள்ளதாக அவர் சாடியுள்ளார். இதன் மூலம், தன்னுடைய மொழி உணர்வு காயப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


